பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 03.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 03.10.2019

திருக்குறள் 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

விளக்கம் 

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

பழமொழி 

A bad work man blames his tools

ஆடத்தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்





பொன்மொழி  

இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்கு தேவை   - விவேகானந்தர்

இரண்டொழுக்க பண்பாடு

1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன்
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்
3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன் 

பொது அறிவு

1) தமிழ்நாட்டின் மாநில சின்னம் எது?
திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் 

TODAYS ENGLISH WORDS

1) ACHIEVER - சாதனையாளர் 

2) ACHIEVEMENT - சாதனை 

செய்தி துளிகள் 

காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளிக்கிறது.


மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி ஆய்வு.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தடுப்புப் பணி - ரூ.244 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு: ஆட்சியர் தகவல்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: நினைவிடத்தில் பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை.

உலக தடகள போட்டியில் உயரம் தாண்டுதலில் ரஷிய வீராங்கனை மரியா ‘ஹாட்ரிக்’ சாம்பியன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM