பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 14.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 14.10.2019


திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை


பழமொழி

A good face needs no paintsஅழகிய முகத்திற்கு அரிதாரம் தேவையில்லை






பொன்மொழி 
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்


Today English word

Causes - காரணங்கள் 
effects - விளைவுகள் 

செய்தி துளிகள் 

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி.

கர்தார்பூர் வழித்தடத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய மந்திரி ஹர்சிம்ராத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை அக்.17-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மஞ்சு ராணி.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விபத்தை தடுக்க புதிய பில்லர் பாக்ஸ்கள் அமைப்பு: மின் துறை அதிகாரிகள் தீவிரம்.

மும்பையில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றார் சென்னை வீரர் பிரக்யானந்தா.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM