பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 23.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 23.10.2019


திருக்குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
பழமொழி

A journey of a thousand miles begins with a single step

ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது

பொன்மொழி 
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .


Today English word

routine      -  வழக்கமான 
already        -   ஏற்கனவே 

செய்தி துளிகள் 

10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

அந்தமான் நிகோபார் தீவுகளில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.3 ரி‌க்ட‌ர் பதிவானது.

 சீன பட்டாசு விற்பனை செய்வதை பார்த்தாலே பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். சீன பட்டாசு வாங்குவோர், விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 உலக காது கேளாதோர் டென்னிஸ் போட்டி துருக்கி நாட்டின் அன்டால்யா நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சென்னை அடையாறைச் சேர்ந்த பிரித்வி சேகர் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 ராஞ்சி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி  இன்று இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது.  இதன்மூலம்  இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் தொடரை வென்றது.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM