பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 10.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 10.10.2019

திருக்குறள் 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விளக்கம் 

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

பழமொழி 

A drawing man will catch at a straw
நீரில் மூழ்குபவனுக்கு துரும்பும் தெப்பமாகும்


பொன்மொழி  

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
- Goethe.

இரண்டொழுக்க பண்பாடு

1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன்
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்
3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன் 

பொது அறிவு

1) இந்தியாவின் தேசிய மரம் எது?
ஆலமரம் 

TODAYS ENGLISH WORDS

1) kids - மழலைகள் 

2) Children - குழந்தைகள்  

செய்தி துளிகள் 

முடிவுக்கு வருகிறது தென்மேற்கு பருவ மழை- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

2019 வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜான் பி.குடெனாப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை ஜமுவா போரோ முன்னேற்றம்.

சீன அதிபர், பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை: பாதுகாப்பு, விழா ஏற்பாடுகளை மேற்கொள்ள 34 சிறப்பு அதிகாரிகள் மற்றும் 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.

சிவகங்கை: வேளாண் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக சிவகங்கையில் உள்ள  பள்ளி மாணவர்கள் வயலில் இறங்கி நாற்று நட்டனர்.

உலக சாம்பியன் பட்டம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய கேரள ஒலிம்பிக் சங்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM