பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 16.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 16.10.2019


திருக்குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

பழமொழி

A guilty conscience needs no Accuser


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

பொன்மொழி 
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.


Today English word

Hospitality      -  விருந்தோம்பல்  
Guest               -  விருந்தினர் 

செய்தி துளிகள் 

தமிழகத்தில் கோவை - பொள்ளாச்சி, கோவை - பழனி, கரூர் - சேலம் ஆகிய பகுதிகளில் ரெயில் சேவை தொடக்கம்.

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு .

2020-ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய முடியும்: இந்திய ஹஜ் குழு.

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவு: கீழடியில் இருந்து தொல்லியல்துறையினர் காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 'சேவா ரயில்'திட்டம்: தமிழகத்தில் 3 புதிய ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பியூஸ் கோயல்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM