பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 11.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 11.10.2019

திருக்குறள் 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

விளக்கம் 

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பழமொழி 

A fog cannot be dispelled with a fan
சூரியனை கையால் மறைக்க முடியுமா?


பொன்மொழி  

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.

இரண்டொழுக்க பண்பாடு

1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன்
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்
3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன் 

பொது அறிவு

1) இந்தியாவின் தேசிய மொழி எது?
ஹிந்தி 

TODAYS ENGLISH WORDS

1) awesome - அற்புதமான 

2) Super - அருமை  

செய்தி துளிகள் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மயங்க் அகர்வால் 108 ரன்கள், விராட் கோலி 63 ரன்கள் குவிப்பு.


இலக்கியத்துக்கான நோபல் பரிசுகள் 2018 மற்றும் 2019: போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக், ஆஸ்திரியாவின் பீட்டர் ஹண்ட்கேவுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.

150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு.

 2 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.

சென்னைதமிழை கற்றுக் கொள்ள சீனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் : சீன ஊடகக்குழு தலைவர் கலைமகள் தமிழில் பேட்டி.

கீழடியில் அகழாய்வு பணிகளை பொதுமக்கள் பார்வையிட அக். 13 வரை மட்டுமே அனுமதி: அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM