பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 04.10.2019

திருக்குறள் 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

விளக்கம் 

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

பழமொழி 

A cat may look at a king

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் 



பொன்மொழி  

பலவற்றை காணுங்கள் சிலவற்றை மட்டும் பேசுங்கள்  - வில்லியம் ஷேக்ஸ்பியர் 

இரண்டொழுக்க பண்பாடு

1) நான் என் வாழ்நாளில் எந்த ஒரு உயிருக்கும் உடலுக்கும் துன்பம் தர மாட்டேன்
2) துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்தவரை உதவிகள் செய்வேன்
3) அனைவரிடமும் அன்பு கட்டி அரவணைத்து வாழ்வேன் 

பொது அறிவு

1) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனை மரம்  

TODAYS ENGLISH WORDS

1) WIN - வெற்றி 

2) WINNER - வெற்றியாளர்  

செய்தி துளிகள் 

பிரான்ஸ் நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு.

டெஸ்ட் போட்டியில் 300 ரன்களுக்கு மேல் எடுத்த 3வது இந்திய தொடக்க ஆட்டக்கார இணை என்ற சாதனையை ரோகித் மற்றும் மயங்க் படைத்து உள்ளனர்.

போக்குவரத்து விதிமுறை மீறல் காரணமாக ஒரே மாதத்தில் 3602 பேர் மீது வழக்குப்பதிவு: ரூ.2.75 லட்சம் அபராதம் விதிப்பு.

டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை செல்லும் வந்தே பாரத் விரைவு ரயில் ஜம்மு மக்களுக்கான நவராத்திரி பரிசு: பிரதமர் மோடி.

இந்தியாவின் முதல் மிதக்கும் கூடைப்பந்து மைதானம் மகராஷ்டிரா அருகே அரபிக்கடலில் திறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

4th STANDARD LESSON PLAN FOR ALL SUBJECTS FIRST TERM