பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 15.10.2019

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 15.10.2019


திருக்குறள்


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.


ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

பழமொழி

A good reputation is a fair estate


நற்குணமே சிறந்த சொத்து 


பொன்மொழி 
முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி


Today English word

Nature      - இயற்கை  
Artificial  - செயற்கை  

செய்தி துளிகள் 

5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது.

வீழ்த்தப்படவோ, விட்டு கொடுக்கவோ கூடாது; நாட்டின் கண்பார்வையற்ற முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேட்டி.

தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை.

2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நான்காம் வகுப்பு தமிழ்